மே 09, சென்னை (Health Tips): பப்பாளி பழமானது சிறந்த சுவையை தருவதோடு, இதன் விதையும் நமக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை அளிக்கிறது. அந்தவகையில், பப்பாளியின் விதைகளை (Papaya Seeds) ஊறவைத்து அந்த நீரை பருகி வந்தால், நாம் உடலில் என்னவெல்லாம் மாற்றம் நிகழும் என்பதை இதில் பார்ப்போம். School Teacher Rape: பள்ளி ஆசிரியை பாலியல் பலாத்காரம்; போதை ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி அத்துமீறல்..!

செய்முறை: பழுத்த பப்பாளியில் உள்ள விதையை நன்கு தண்ணீரில் கழுவி, அதனை தண்ணீரில் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின்பு, காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி, வெறும் வயிற்றில் பருகிவர கீழ் காணும் பயன்களை பெறலாம்.

பப்பாளி விதையின் பயன்கள்: பப்பாளியின் விதைகளை ஊறவைத்து அந்த நீரை பருகி வருவதால், செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது. இதனை வெறும் வயிற்றில் குடிப்பதால், குடல் இயக்கம் சீராக செயல்படும். மேலும், கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்களும் இதனை பருகலாம். இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. பப்பாளி விதை ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு இயற்கை பானமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய் அபாயத்தை தடுக்கிறது. உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.