ஏப்ரல் 05, தர்மசாலா (Himachal Pradesh News): துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் 50,000க்கும் அதிகமான உயிர்களை பறித்தது. பல இலட்சக்கணக்கான வீடுகளை தரைமட்டமாக்கி மக்களை வீதியில் தள்ளியது. இந்நிலநடுக்கத்தை முன்னதாகவே கணித்து கூறியிருந்த டச்சு நிலவியல் ஆய்வாளர், அடுத்தபடியாக இந்தியா - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளை மையமாக வைத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தது இருந்தார்.

தெற்காசிய பரப்பில் மிகப்பெரிய நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு: அதனை உறுதிசெய்யும் பொருட்டு கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களின் உயிரை பறித்தது. துருக்கி - சிரியா அளவு பெரிய நிலநடுக்கம் ஏற்படவில்லை எனினும், இவை அங்கு ஏற்பட்டதைப்போல பயங்கர நிலநடுக்கம் ஏற்படுவதன் ஆரம்பகட்ட என கணிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டு வந்தது. Cicada Insects: 221 ஆண்டுகளுக்கு பின் ஜாம்பி பூச்சிகள் படையெடுப்பில் சிக்கிய அமெரிக்கா; வியப்புடன் பதறவைக்கும் வினோதம்.! 

ஹிமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகில் பதிவாகியுள்ள நிலநடுக்கம், அங்குள்ள சம்பா பகுதியை மையமாக வைத்து நேற்று இரவு 09:34 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கிய காரணத்தால், மக்கள் பதற்றமடைந்த வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கம் குறைந்தபின்னர், தங்களின் வீடுகளுக்கு மீண்டும் சென்றனர்.

இந்நிலநடுக்கத்தால் உயிர் பலி மற்றும் படுகாயம், பிற சேதங்கள் எதும் ஏற்படவில்லை எனினும் மக்களிடம் நிலநடுக்கம் தொடர்பான பீதி தொற்றிக்கொண்டுள்ளது.

நிலநடுக்கத்தின் வீடியோ: