![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/12/Suicide-File-Pic-Photo-Credit-Pixabay-380x214.jpg)
ஏப்ரல் 12, கன்னியாகுமரி (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியை சேர்ந்த தம்பதி விஜயகுமார் (வயது 48)-நேவிஸ் (வயது 45). இத்தம்பதிகளுக்கு பிபின் (வயது 21) என்ற மகன் உள்ளார். இவர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் (Hotel Management) படித்து முடித்துவிட்டு, சென்னையில் வேலை செய்து வருகிறார். விஜயகுமார் தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையில் இருக்கின்ற ஒரு பன்றி பண்ணையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். Brilliant Catch By Reece Topley: சிறப்பாக கேட்ச் பிடித்த ரீஸ் டாப்லி – மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் இதோ..!
இவருடைய மனைவி நேவிஸ், 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிப்படைந்து உயிரிழந்துவிட்டார். இதனால் மனமுடைந்த விஜயகுமார், அதிகமாக மது அருந்தி வந்துள்ளார். மேலும், இவரது உடல் நலம் மோசமான நிலைக்கு சென்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விஜயகுமார் அவரது அறையில் தூங்க சென்றுள்ளார். பின்னர், நேற்று காலையில் அவர் நெடுநேரமாகியும் வெளியே வராத காரணத்தினால் அவருடன் வேலை செய்யும் ராபி என்ற நபர் அறைக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது அவர், அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் விஜயகுமாரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதுதொடர்பாக, தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.