Reece Topley Take Rohit Sharma Wicket In IPL 2024 (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 12, மும்பை (Sports News): ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்று முடிந்த 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (MI Vs RCB) அணிகள் மோதின. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. Gold Price Today: ரூ.54,000ஐ கடந்தது இன்றைய சவரன் தங்கத்தின் விலை; தொடர்ந்து உச்சக்கட்டம்.!

இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் டுப்ளசிஸ் 61, கார்த்திக் 53, ரஜத் பட்டிதார் 50 ரன்கள் அடித்தனர். மும்பை அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்களை எடுத்தார். பின்னர், 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் அதிரடியாக விளையாடினர். முதல் 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் குவித்தனர். இதில், 11.2 ஓவரை வீசிய வில் ஜாக்சின் பந்தை ரோஹித் சர்மா ஸ்வீப் ஷாட் அடித்த போது, ஷார்ட் ஃபைன் லெக் திசையில் நின்ற பீல்டர் ரீஸ் டாப்லி அவருடைய இடது கையால் தாவி அற்புதமான கேட்ச் பிடித்து அசத்தினார்.

இறுதியில், மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 199 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 69 ரன்களும், சூர்யாகுமார் யாதவ் 52 ரன்கள் எடுத்திருந்தனர். ரோஹித் சர்மா அடித்த பந்தை அற்புதமாக கேட்ச் பிடித்த ரீஸ் டாப்லியின் வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.