Heatwave Death In TN: கோடை வெயில் தாக்கம்; வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து பலி..!

தமிழகத்தில் வாக்கு செலுத்துவதற்காக சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Heatwave Death In TN: கோடை வெயில் தாக்கம்; வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து பலி..!
Heat wave file pic (Photo credit: healthshots)

ஏப்ரல் 19, சென்னை (Chennai News): நாடாளுமன்ற தேர்தலுக்கான (Parliamentary Elections) வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். Thrill Win For Mumbai Indians: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி – கொண்டாட்டத்தில் மும்பை அணி வீரர்கள்..!

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே உள்ள செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையம் ஒன்றில், வாக்களிக்க சென்ற சின்னபொண்ணு (வயது 77) என்பவர் மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும், சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், பழனிச்சாமி (வயது 65) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்து, திருத்தணி அடுத்துள்ள நெமிலி கிராமத்தை சேர்ந்த கனகராஜ் (வயது 59) என்ற முதியவர், வாக்கு செலுத்துவதற்காக வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இவ்வாறு, கோடை வெயிலின் தாக்கத்தினால் வாக்களிக்க வந்த வயது முதிந்தவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 19, 2024 03:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).