ஏப்ரல் 19, முலான்பூர் (Sports News): ஐபிஎல் 2024-ஆம் ஆண்டு நடைபெற்று கொண்டிருக்கும் 33-வது லீக் போட்டியில் நேற்றைய தினம் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (PBKS Vs MI) அணிகள் மோதின. இந்த ஆட்டம் சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்றது. இதில், முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. Mysterious Person Snatched Jewelry: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை திருட்டு; மர்ம நபர் தப்பி ஓட்டம்..!
முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக விளையாடி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்சல் பட்டேல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர், களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே சொதப்பலானது. பவர்பிளே ஓவர்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்நிலையில், 6.5 ஓவரில் ஸ்ரேயாஸ் கோபால் வீசிய பந்தை அடித்த பாட்யா, ஸ்ரேயாஸ் கோபாலின் சிறப்பான டைவ் கேட்ச்சினால் அவுட் ஆகி சென்றார். இதனால் பஞ்சாப் அணி மேலும் தடுமாறியது. இருப்பினும், ஷஷாங் மற்றும் ஆஷூடோஸ் சர்மா கடுமையாக போராடினர்.
ICYMI!
A sharp catch off his own bowling ft. Shreyas Gopal 😎
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #PBKSvMI pic.twitter.com/SoOdl5ldoc
— IndianPremierLeague (@IPL) April 18, 2024
இறுதியில், பஞ்சாப் அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணி தரப்பில் ஆஷூடோஸ் சர்மா அதிரடியாக விளையாடி வெறும் 28 பந்துகளில் 61 ரன்களை குவித்தார். மும்பை அணி தரப்பில் பும்ரா, கோட்ஸி தலா 3 விக்கெட்களை எடுத்து மும்பை அணியின் வெற்றிக்கு பங்களித்தனர். மும்பை அணி வெற்றி பெற்றதை மும்பை அணி கேப்டன் ஹர்திக், ரோஹித் மற்றும் இஷான் கிசான் உள்ளிட்ட வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆட்டநாயகன் விருதை சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா தட்டிச் சென்றார்.
An absolute rollercoaster of a game in Mullanpur comes to an end! 🎢
And it's the Mumbai Indians who emerge victorious in a nerve-wracking contest 🔥👏
Scorecard ▶️ https://t.co/m7TQkWe8xz#TATAIPL | #PBKSvMI pic.twitter.com/sLKVcBm9oy
— IndianPremierLeague (@IPL) April 18, 2024