Young Girl Gang Rape: இன்ஸ்டாகிராம் பழக்கம்; இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்..!

ராமநாதபுரத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் அதனை இளம்பெண்ணின் வருங்கால மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Young Girl Gang Rape: இன்ஸ்டாகிராம் பழக்கம்; இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்..!
Gang Rape (Photo Credit: Pixabay)

மே 07, ராமநாதபுரம் (Ramanathapuram News): ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது 20). இவர் அதிகமான நேரத்தை சமூகவலைதளங்களில் செலவழித்துள்ளார். குறிப்பாக, இன்ஸ்டாகிராமை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ள நிலையில், 19 வயது இளம்பெண்ணுடன் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. England's Mandate for Single-Sex Toilets: இனி ஒவ்வொரு பாலினத்தருக்கும் தனி தனி கழிப்பறைகள்.. இங்கிலாந்து அரசின் அதிரடி அறிவிப்பு..!

இதனையடுத்து, இருவரும் அவர்களது செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், சந்துரு அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். இதனால், அந்த பெண் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் சந்துருவின் நண்பர்களான சக்தி (வயது 20), தனுஷ் (வயது 20) ஆகிய மூவரும் அங்கு இருந்துள்ளனர். இவர்கள் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் (Gang Rape) செய்துள்ளனர். மேலும், இதனை அந்த இளம்பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். இதுகுறித்து, அவர் யாரிடமும் சொல்லாமல் மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், இளம்பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் எடுத்து வைத்திருந்த ஆபாச வீடியோவை இளம்பெண்ணை திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்த மாப்பிள்ளைக்கு இதனை அனுப்பி வைத்துள்ளனர். இதனைக்கண்ட மாப்பிள்ளை பெரும் அதிர்ச்சியடைந்து, திருமணத்தை நிறுத்தியுள்ளார். பின்னர், இதில் சம்மந்தபட்ட அந்த 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

(The above story first appeared on LatestLY on May 07, 2024 04:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).