Tirupattur Bus Crash: தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்து - தனியார் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 3 ஆண்கள், 1 பெண் பலி..!
சென்னையில் இருந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த ஆம்னி பேருந்தும் - பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி பயணித்த அரசு விரைவுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.
நவம்பர் 11, வாணியம்பாடி (Tirupattur News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, செட்டியப்பனூர் கிராமம் அருகே, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, சென்னை நோக்கி பயணித்த அரசு விரைவுப்பேருந்தும், எதிர் திசையில் சென்னையில் இருந்து பெங்களூர் நெடுஞ்சாலையில் பயணித்த தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கிக் கொண்டன.
இந்த விபத்தில் நான்கு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டு வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். Actor Ganga Died by Heart Attack: தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி.!
இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டதில், பேருந்துகளின் முன்புறம் அப்பளம்போல நொறுங்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி காவல்துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி மூன்று ஆண்கள், ஒரு பெண் பலியானது உறுதியாகியுள்ளது. அவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
(The above story first appeared on LatestLY on Nov 11, 2023 07:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

