நவம்பர் 11, சென்னை (Cinema News): கடந்த 1983 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கம், இசை, தயாரிப்பில் வெளியான திரைப்படம் உயிருள்ளவரை உஷா (Uyirullavarai Usha). இப்படத்தில் நடிகர்கள் கங்கா (Actor Ganga), விஜய் டி.ராஜேந்தர், ராணி, கவுண்டமணி, சரிதா, காந்திமதி, ராதாரவி உட்பட பலரும் நடித்திருந்தனர்.

நடிகர் கங்காவின் அறிமுக படமான உயிருள்ளவரை உஷா நல்ல வரவேற்பை பெற்றதால், அதனைத்தொடர்ந்து கரை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உட்பட பல படங்களில் அவர் நடித்திருந்தார். 80 Indian Fishermen Released by Pakistan: பாக். சிறையில் தவித்த 80 இந்திய மீனவர்களை விடுதலை; அட்டாரி-வாகா எல்லைவழியே தாயகம் வருகை.! 

Actor Ganga (Photo Credit: @KayalDevaraj X)

பின் குணசித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தற்போது 63 வயதாகும் நடிகர் கங்கா, தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.

நேற்று இரவு அவரின் உயிர் பிரிந்த நிலையில், அவரது மறைவை அறிந்த திரையுலகினர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த கங்கா, பின்னாளில் திரைப்பயணத்தில் இருந்து விலகிக்கொண்டார்.