Tiruppur Shocker: சுடுகாட்டில் இளம்பெண்ணின் சடலம்; வடமாநில பெண் கற்பழித்து கொலை?.. திருப்பூரில் பயங்கரம்.!

கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக இளம்பெண்ணின் சடலம் சுடுகாடு பகுதியில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறது. குற்றவாளிகளை திருப்பூர் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tiruppur Shocker: சுடுகாட்டில் இளம்பெண்ணின் சடலம்; வடமாநில பெண் கற்பழித்து கொலை?.. திருப்பூரில் பயங்கரம்.!
Perumanallur | Crime file Pic (Photo Credit: Source / Pixabay)

செப்டம்பர் 25, பெருமாநல்லூர் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர், ராக்கியப்பட்டி சுடுகாடு பகுதியில், இன்று காலை நேரத்தில் இளம்பெண் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதனைக்கண்ட உள்ளூர் மக்கள், பெருமாநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.

முதற்கட்ட ஆய்வின்போது பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. கட்டையால் அடித்தும் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். Benefits of Athipalam: மூலம் முதல், இரத்தம் வரை.. உடலை அணுஅணுவாக பாதுகாக்க தேவையான அனைத்தும் அத்தியில்.. நன்மைகள் விபரம் இதோ.! 

அவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இளம்பெண்ணின் அடையாளத்தை வைத்து பார்க்கையில், அவர் வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.

அவரின் பெயர் விபரம் போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவரை யார்? எதற்காக கொலை செய்தனர்? என விசாரிக்கப்பட்டு வருகிறது. பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

நிகழ்விடத்தில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதனும் நேரில் சென்று விசாரணை நடத்தினார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Sep 25, 2023 06:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).