Benefits of Athipalam: மூலம் முதல், இரத்தம் வரை.. உடலை அணுஅணுவாக பாதுகாக்க தேவையான அனைத்தும் அத்தியில்.. நன்மைகள் விபரம் இதோ.!

அத்திப்பழத்தில் இருக்கும் நார்சத்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்கிறது. அத்தியின் இயற்கை இனிப்பு, மனிதனின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தினை சமநிலைப்படுத்தும்.

Benefits of Athipalam: மூலம் முதல், இரத்தம் வரை.. உடலை அணுஅணுவாக பாதுகாக்க தேவையான அனைத்தும் அத்தியில்.. நன்மைகள் விபரம் இதோ.!
Athipalam (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 25, சென்னை (Health Tips): நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் அத்திப்பழத்தில் (Athipalam), புதிதாக பறிக்கப்பட்ட பழத்தை விடவும், உலர்ந்த அத்தியில் (Fig Fruit) பல நன்மைகள் கிடைக்கின்றன. அதில் இருக்கும் தாதுக்கள், வைட்டமின் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. வாரத்திற்கு குறைந்தது 2 முதல் 3 அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர்ப்பை கற்கள் பிரச்சனை, மூலநோய், வாய் துர்நாற்றம் போன்றவை சரியாகும்.

அத்தியில் இருக்கும் இரும்புசத்து, பாஸ்பிரஸ், கால்சியம், மெக்னீசியம், நார்சத்து, வைட்டமின் சி, ஏ , கே ,ஈ ,கே போன்றவை உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜனை வழங்கும். பித்தம் இருப்பவர்கள் தினம் அத்திப்பழத்தை சாப்பிட்டு வர, வியர்வை வழியே பித்த நீர் வெளியேற்றப்படும்.

உடல் எடையினை அதிகரிக்க விரும்பினால், தினமும் 2 அத்திப்பழம் சாப்பிட்டால் போதுமானது. இரத்த உற்பத்தியும் அதிகரிக்கப்படும், உடல் வளர்ச்சியும் கிடைக்கும். இரத்த சோகை பிரச்சனை காரணமாக அவதிப்படுவோர், இரவு நேரத்தில் 4 அத்திப்பழத்தை நீரில் ஊறவைத்து காலையில் அதனை சாப்பிட்டு நீரை குடிக்கலாம். Jawan 1000 Crore: இமாலய சாதனை படைத்த ஷாருக்கானின் ஜவான் திரைப்படம்; அட்லீயின் மாபெரும் விஸ்வரூபம்.. கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.! 

இது உடலில் புதிய இரத்தம் உருவாக உதவி செய்யும். இரத்தசோகை பிரச்சனையும் சரியகும். எலும்புகளை வலுப்படுத்த முக்கியமாக தேவைப்படும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பிரஸ், வைட்டமின் கே போன்றவையும் அத்திப்பழத்தில் உள்ளது. இதனால் எலும்புகளின் அடர்த்தி வலுப்படுத்தப்படும். மூட்டுவலி, முதுகுவலி, எலும்பு சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்.

இப்பழத்தில் இருக்கும் நார்சத்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்கிறது. அத்தியின் இயற்கை இனிப்பு, மனிதனின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தினை சமநிலைப்படுத்த உடலுக்கு தேவைப்படும் பொட்டாசியம் எலக்ட்ரோலைட் சமநிலை பெறும். இரத்த நாளத்தின் அழுத்தம் குறையும்.

உயர் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனை உடையோர் தினமும் 3 அத்திப்பழத்தை சாப்பிடலாம். காய்ந்த அத்தியை நேரடியாக சாப்பிடுவது, நீரில் ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. மலச்சிக்கல் பிரச்சனை உடையோர் அத்தியை சாப்பிட அப்பிரச்சனை சரியாகும். அத்திப்பழத்தில் இருக்கும் கரையக்கூடிய நார்சத்து உடல் பகுதியை சுத்தப்படும். ஆசனவாய் வெடிப்பு, மூலம் போன்ற பிரச்சனையையும் தூரவிலக்கும். வெண்குஷ்டம், வெண்புள்ளி பிரச்சனைகள் சரியாகும்.

(The above story first appeared on LatestLY on Sep 25, 2023 06:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).