Minor Girl Gang Raped: திருவிழாவுக்கு வந்த 17 வயது சிறுமியை கடத்திச்சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம்; திருப்பூரில் பதறவைக்கும் சம்பவம்.!
கோவில் திருவிழாவில் ஊரே கூடியிருக்க, 17 வயது சிறுமியை திட்டமிட்டு கடத்திய கும்பல் ஒன்று கூட்டுப்பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட துயரம் திருப்பூரை அதிரவைத்துள்ளது.
மார்ச் 13, திருப்பூர் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியில் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். வெள்ளகோவில் பகுதியில் இருக்கும் கோவில் ஒன்றில், சமீபத்தில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை காண ஊரே கோவிலில் திரண்டு விழாக்கோலம் பூண்டு இருந்தது. இந்நிலையில், கோவிலுக்கு வந்த சிறுமியை நோட்டமிட்ட 2 இளைஞர்கள், 17 வயது சிறுமியை பின்தொடர்ந்து சென்று மறைவான பகுதிக்கு கடத்திச்சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 09ம் தேதி இக்கொடூர செயல் அரங்கேறிய நிலையில், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவோம் என சிறுமியை மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். Salman Khan Teams Up With AR Murugadoss: போக்கிரியுடன் இணையும் துப்பாக்கி, கத்தி.. எகிறும் எதிர்பார்ப்பு..!
கண்ணீருடன் துயரத்தை விவரித்த சிறுமி: பயந்துபோன சிறுமி வீட்டிற்கு திரும்பி உண்மை எதுவும் கூறாமல் பயத்தில் இருக்க, மகளை கவனித்த பெற்றோர் விசாரித்து இருக்கின்றனர். அச்சமயம் கும்பல் ஒன்றால் நடந்த கொடுமை குறித்து கண்ணீருடன் விவரித்து இருக்கிறார். இதனையடுத்து, பெற்றோர் தரப்பில் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, சிறுமியை பலாத்காரம் செய்த விவகாரத்தில் பிரபாகரன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மருத்துவ பரிசோதனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.
இவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், சிலருக்கு அதிகாரிகள் சார்பில் வலைவீசப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
(The above story first appeared on LatestLY on Mar 13, 2024 08:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

