Salman Khan Teams Up With AR Murugadoss (Photo Credit: @BeingSalmanKhan X)

மார்ச் 12, புதுடெல்லி (New Delhi): தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட படங்கள் மூலமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss). மேலும் பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து "அகிரா" படத்தையும் இயக்கி இருந்தார். விஜய்யுடன் தொடர்ந்து வெற்றி படங்களைக் கொடுத்தவர். ஆனால் அவரின் கடைசி படமான தர்பார் படுமொக்கையாக அமைந்த காரணத்தால், மீண்டும் படம் எடுக்காமல் இருந்தார்.இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த படத்தை எடுத்து வருகிறார். Viral Video: அதிவேகமாக வந்த கார்.. சுக்குநூறான இருசக்கர வாகனங்கள்.. வைரலாகும் வீடியோ..!

இந்தப் படத்தை அடுத்து சல்மான் கான் (Salman Khan) நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதை சஜித் நாடியத்வாலா (Sajid Nadiadwala) தயாரிக்கிறார். இந்தப் படம் சல்மான் கான் நடித்து வெளியான 'கிக்' படத்தின் அடுத்த பாகம் (Kick 2) என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் 2025ஆம் ஆண்டு ரமலானுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான் போக்கிரி படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன ராதே யுவர் மோஸ்ட் வான்டட் பாய் எனும் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.