KIDNAP & GANG RAPE: திருப்பூருக்கு வேலைக்கு வந்த பெண்மணி கடத்தி செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம், நகை & பணம் திருட்டு..!

வேலைக்காக திருப்பூர் வந்த 33 வயது இளம்பெண்ணை கரூர் கடத்தி சென்ற கயவர்கள், அங்கு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

KIDNAP & GANG RAPE: திருப்பூருக்கு வேலைக்கு வந்த பெண்மணி கடத்தி செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம், நகை & பணம் திருட்டு..!
RAPE FILE PIC (PHOTO CREDIT: PIXABAY)

மே 27, ஏழாயிரம்பண்ணை (VIRUDHUNAGAR NEWS): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்பண்ணை, கீழ செல்லையாபுரம் வடக்குத்தெரு பகுதியில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி. இவரின் மகள் சூர்யா (வயது 33). திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.

அந்த புகாரில், "கடந்த 25ம் தேதி வேலைக்காக திருப்பூர் இரயில் நிலையத்திற்கு வந்தேன். காலை 8 மணிக்கு இரயிலில் இருந்து இறங்கினேன். அங்கு சரண் மற்றும் பாண்டி என்போர் என்னிடம் வேலை வாங்கி தருகிறோம் என பேசினர்.

அவர்கள் வேலை வாங்கி கொடுப்பதாக அழைத்ததன் பேரில், அவர்களை நம்பி சென்றேன். என்னை கரூருக்கு அழைத்து சென்றவர்கள், விடுதியில் தங்க வைத்து பழ ஜூஸ் கொடுத்தனர். Hotel Owner Killed: ஹோட்டல் உரிமையாளர் கொடூரமாக கொலை; சூட்கேசில் சடலம் மீட்பு.. காதல் ஜோடி உட்பட 4 பேர் கைது.!

பழ ஜூஸை குடித்த சில நிமிடத்தில் நான் மயங்கிவிட்டேன். பின் எழுந்து பார்த்தபோது எனது தங்க செயின், கால் கொலுசு, செல்போன் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை.

என்னை மயக்கத்தில் பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர். அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை போன்று எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவில்லை" என கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on May 27, 2023 09:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).