ஏப்ரல் 14, கமலாலயம் (BJP Tamilnadu Office): தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு செயல்பாடுகளில் களமிறங்கியுள்ள பாஜக, தொடர்ந்து தன்னை மக்களிடையே நிலைநிறுத்திக்கொள்ள பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai) கட்டியிருந்த கைக்கடிகாரம் தொடர்பான பிரச்சனையை திமுகவினர் எழுப்பிய நிலையில், திமுகவினரின் ஊழல் பட்டியல் (DMK Files) தயாராகி வருகிறது என்றும், அதனை ஏப்ரல் 14ம் தேதி வெளியிடுகிறோம் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள பாஜக தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைத்து திமுகவின் ஊழல் (DMK Corruption List) பட்டியல் வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "நான் சாமானிய முதல் தலைமுறை அரசியல்வாதி. பல நல்ல மனிதர்களின் உதவியோடு இன்று வரை அரசியல் வாழ்க்கையை நகர்த்தி வருகிறேன். எனது உதவியாளர்கள் சம்பளத்தை எனது நண்பர்களே இன்று வரை வழங்குகிறார்கள். எனது எம்.பி.ஏ கடன் ரூ.11 இலட்சத்தை அடைக்க 7 ஆண்டுகள் கஷ்டப்பட்டேன். கஷ்டப்பட்டு அதையும் அடைத்தேன். சொந்த ஊரில் இருந்து வந்து சென்னையில் இருக்கிறேன். பொறுப்பில் இருக்கும் வரை சென்னை, பின் மீண்டும் அங்கே சென்றுவிடுவேன்.
Bell & Ross நிறுவனம் ரபேல் விமானத்தை வைத்து 500 கடிகாரத்தை தயாரித்தது. நான் வைத்துள்ள ரபேல் கைக்கடிகாரம் 147வது தயாரிப்பு ஆகும். ரபேல் விமானத்தை போல இருக்கும் ரபேல் கைக்கடிகாரம், இந்தியாவிற்கு 2 மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதனை சாதரணமாக கட்ட முடியாது. இந்த கைக்கடிகாரம் செங்கல் போல எடை கொண்டு இருக்கும். இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 2 கடிகாரத்தில் ஒன்றை மும்பையில் வசித்து வரும் மூத்த தனியார் நிறுவன அதிகாரி வாங்கி கட்டியுள்ளார். Happy Tamil New Year: தமிழர்கள் சிறப்பிக்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்.. இன்றைய நாளுக்கான வாழ்த்து செய்தி இதோ.!
இரண்டாவது கடிகாரம் கோயம்புத்தூர் ரேஸ்கோர்சில் உள்ள ஜிம்சன் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை நான் மே 27 ம் தேதி வாங்கி இருக்கிறேன். இதனை எளிதில் வாங்க முடியாது. மார்க்கெட்டிலும் கடிகாரம் இல்லை. இந்தியாவில் 2021 மார்ச் மாதம் சேரலாதன் இராமகிருஷ்ணன் என்பவர் ரபேல் வாட்சை வாங்குகிறார். நான் ரபேல் வாட்ச் குறித்து கேள்விப்பட்டு, கைக்கடிகாரம் தயாரிக்கும் ஜிம்சன் நிறுவனத்திடம் கூறினேன். அவர்கள் மூலமாக இராமகிருஷ்னனிடம் பேசி, நான் வாட்சை வாங்கினேன். அவர் என்னுடன் பழக்கத்தில் இருந்த நண்பர் என்பதால், நான் அதனை எளிதில் பெற்றுக்கொண்டேன்.
நான் பெங்களூரில் பணியாற்றி வந்தபோது இலஞ்சமாக ரபேல் கைக்கடிகாரத்தை வாங்கியதாக கூறுகிறார்கள். நான் கடிகாரத்தை 2021-ல் வாங்கினேன். நான் பெங்களூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய ஆண்டுகள் 2016 முதல் 2019 தான். சிலர் போலியான ரசீதுகளை தயாரித்து பதிவிடலாம். ஆனால், உண்மையான ரசீது இங்குதான் உள்ளது. போலியான ரசீது தயாரித்து பதிவிட்ட திமுகவின் ஊடக அணியின் செயலை வரவேற்று, சாராய அமைச்சர் கீச்சை மறுபதிப்பு (Retweet) செய்து இருக்கிறார். இதைவிட கேவலம் ஏதும் இல்லை. 27.5.2021-ல் இருந்து நான் 2 ஆண்டுகளாக ரபேல் கடிகாரத்தை மட்டுமே கட்டியுள்ளேன்.
இந்த கடிகாரம் ரூ.3 இலட்சம் மதிப்பு கொண்டது. சில மனிதர்கள் Richard Mille கடிகாரத்தை ரூ.1.5 கோடி கொடுத்து வாங்கி கட்டியுள்ளார்கள். அவர்கள் கட்டியுள்ள வாட்சை பற்றி நீங்கள் அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். நேர்மையான அரசியலை முன்னெடுக்க விருப்பினால், அவர்களும் நேர்மையான அரசியலுக்கு வரட்டும். நான் சுத்தமானவன் என்பதால், என்னிடம் உள்ள ஆதாரத்தை வெளியிடுகிறேன்" என கூறினார். Best Air Coolers: வெதும்பவைக்கும் வெயிலை சமாளிக்க எந்த ஏர் கூலர் வாங்கலாம் என யோசனையா?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக..!
நிகழ்வில் ஒளிபரப்பான வீடியோவின்படி, திமுகவினரின் மொத்த ஊழல் சொத்து மதிப்பு ரூ.1,343,170,000,000/- ஆகும். அதில் முதல் 12 இடங்களில் தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
1. ஜெகத்ரட்சகன் பண மதிப்பு ரூ.50,219.37 கோடி
2. எ.வ வேலு பண மதிப்பு ரூ.5,442.39 கோடி
3. கே.என் நேரு பண மதிப்பு ரூ.2,495.14 கோடி
4. கனிமொழி கருணாநிதி பண மதிப்பு ரூ.830.33 கோடி
5. கலாநிதி மாறன் பண மதிப்பு ரூ.12,450 கோடி
6. டி.ஆர் பாலு பண மதிப்பு ரூ.10,841.10 கோடி
7. கதிர் ஆனந்த் பணமதிப்பு ரூ.579.58 கோடி
8. கலாநிதி வீராசாமி பண மதிப்பு ரூ.2,923.29 கோடி
9. கே. பொன்முடி & கெளதம் சிகாமணி பண மதிப்பு ரூ.581.20 கோடி
10. திராவிட முன்னேற்ற கழகத்தின் சொத்து மதிப்பு ரூ.1,408.94 கோடி
11. திமுகவினருக்கு சொந்தமாக தமிழகமெங்கும் உள்ள பள்ளிகளின் சொத்து மதிப்பு ரூ.3,474.18 கோடி
12. திமுகவினருக்கு சொந்தமான தமிழகமெங்கும் உள்ள கல்லூரிகள், பல்கலை.,யின் சொத்து மதிப்பு ரூ.34,184.71 கோடி
13. அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொத்து மதிப்பு ரூ.1,023.22 கோடி
14. உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.2,039 கோடி
15. துபாயில் செயல்பட்டு வரும் நிறுவனத்தின் நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம் ரூ.1000 கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளது. ஆனால், அந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின்; அன்பில் மகேஷ் நோபல் பிரிக்சின் இயக்குனர்களில் ஒருவர்...
16. சபரீசன் சொத்து மதிப்பு ரூ.902.46 கோடி (இலண்டன் முதலீடு மற்றும் மதிப்பு ரூ.430 கோடி).
17. திமுக முதற்கட்ட குடும்பத்திற்கு சொந்தமாக உள்ள சொத்து மதிப்பு ரூ.426 கோடி
18. G Square தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உட்பட பல மாநில முதலீடுகள் ரூ.38,627.79 கோடி
19. SNJ Distilleries, Accord Distilleries & Fortune (ஜெகத்ரட்சகன்), Golden Vats & Kings India Chemical (டி.ஆர் பாலு), KALS (ஜெயமுருகன்) ஆகியோருடையது.
20. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்யும் சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி
ரூ.1,343,170,000,000/- சொத்து மதிப்பில் திமுகவினர் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் பெயர்களில் இருக்கும் சொத்துக்களின் விபரங்கள் ஆகும். இவர்கள் வைத்துள்ள கருப்பு பணம், பினாமி நிலங்கள், கணக்கில் வராத நகைகள் சேர்க்கப்படவில்லை.
அதனைத்தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "நண்பர்களே இது முதல் பாகம் மட்டுமே. இவை அனைத்துமே கருப்பு பணம், பினாமி இல்லை. அவர்கள், அவர்களுடைய மனைவி, மருமகள்-மருமகன், மகன்-மகள் என குடும்பத்தில் உள்ள சொத்துக்கள் மட்டுமே இவ்வுளவு மதிப்பு ஆகும். சமீபத்தில் திமுகவில் சேர்ந்த சில நபர்கள் ரூ.20 ஆயிரம் கோடி அளவில் கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துக்கள் வைத்துள்ளனர். இவற்றை இரண்டாம் பாகத்தில் பார்ப்போம். 1 இலட்சத்து 31 ஆயிரம் கோடி மதிப்பீடு நேரடி சொத்துக்கள் இவை. பக்கத்தில் என் மண் என் மக்கள் பக்கத்தில் அனைத்து விபரமும் தெளிவாக இருக்கும். Family Trapped Lift: லிப்டில் சிக்கிய குடும்பத்தினர்.. பதைபதைப்பு நிமிடங்கள்.. காப்பாற்றிய தீயணைப்பு படை அதிகாரிகள்.!
உதயநிதி ஸ்டாலின் கடந்த 2008ல் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை ஆரம்பிக்கும்போது, சொல்லிக்கொள்ளும் அளவு சொத்து இல்லை. 2008ல் இருந்து 2011 வரை 300 கோடிக்கு பணம் எடுத்து பல படங்கள் தோல்வியுற்றுள்ளன. இன்று ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.2000 கோடி ஆகும். மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசன் Money Laundering செய்கிறார். West Bank ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் முறைகேடுகள் செய்துள்ளது. முதல்வர் துபாய் நாட்டுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக கூறினார். நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.1000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்து புகழ்ந்தார்கள்.
கடந்த 2009ல் உதயநிதி ஸ்டாலினும், 2016ல் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் அந்நிறுவனத்திதின் இயக்குனர்களாக இருந்து பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்கள். 2006ல் இருந்து 2011 வரை திமுக ஆட்சியில் இருக்கையில் மெட்ரோவுக்கான முதல் அனுமதி வருகிறது. ஜப்பானின் சிக்கா நிறுவனம் மெட்ரோவுக்கு 59% நிதி வழங்குகிறது, மத்திய அரசு 15% நிதி வழங்குகிறது, மீதமுள்ள 21% மாநில அரசு நிதி வழங்குகிறது என முதல் வழித்தடத்திற்கு ரூ.16,100 கோடிக்கு டெண்டர் ஏலம் விடப்படுகிறது. 9 நாட்களில் கட்டுமான பணிகளுக்கு ஏற்பாடுகள் நடக்க, டெண்டருக்கு சில நாட்களுக்கு முன்பு சுங்கவரியை மாநில அரசு சேர்க்கிறது.
மூன்று நிறுவனங்கள் டெண்டருக்கு விண்ணப்பித்த நிலையில், இரண்டாவதாக இருந்த ஆல்ஸ்டாம் நிறுவனம் சுங்கவரிக்கு பின்னர் முன்பு வருகிறது. சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த Indo European Venture Private Limited நிறுவனம் மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த Global King Technology Limited நிறுவனம் ரூ.200 கோடி மு.க ஸ்டாலினுக்கு லஞ்சம் வழங்குகிறது. கடந்த 2011ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ-யிடம் நான் புகார் வழங்கவுள்ளேன். மத்திய அரசின் 15% பங்கு மெட்ரோவில் இருப்பதால், சி.பி.ஐ நேரடியாக இதனை விசாரிக்கலாம். சென்னை மெட்ரோ முதல் வழித்தட பணிகளில் ரூ.200 கோடி இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. Man Killed: திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மேலாளர்.. கட்டிவைத்து அடித்தே கொன்ற பயங்கரம்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.!
தமிழனை மையமாக வைத்து, தமிழரை முன்னேற்ற எந்த விஷயமும் நடைபெறவில்லை. அடுத்தடுத்த தேர்தலை நோக்கியும், குடும்ப வளர்ச்சி நோக்கியும் திமுகவினர் மக்களை திசைதிருப்பி தேர்தலை சந்திக்கின்றனர். நாம் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். ஜெயகாந்தன் திமுக குறித்து இலக்கியவாதியின் அரசியல்வாதி அனுபவம் என்ற புத்தகத்தில், "திமுக அரசியல் இயக்கம் அல்ல.. மனித மரியாதைகளும், சமுதாய வளர்ச்சிக்கும், இந்திய நாகரீகத்திற்கு, கலாச்சாரத்திற்கும் ஏற்பட்டுள்ள பேரழிவின் அறிகுறி. திமுக ஊழலின் வித்து என்று கூறுவது அதீத கணக்காகிவிடும்.
அது சமூகத்தில் ஏற்கனவே பரவியிருந்த ஊழல்களின் நிலை, சமூக பலவீனத்தின் மொத்த சாராம்சம், திமுகவின் தன்மை ஒருபோதும் மாறாது. மனிதனின் மொத்த அழிவு வடிகால் திமுக" என 49 ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளார். அவர் காமராஜர் காலத்தில், காமராஜருக்கு பிரச்சார பீரங்கியாக இருந்தார் என்பதை நாம் அறிவோம். நாம் பேசப்பேச திமுக இன்னும் பல கீழ்த்தரமான செயல்களை செய்வார்கள். மதன் ரவிச்சந்திரனின் மீது உதயநிதி ஸ்டாலின் பதிவு செய்திருந்த மான் கறி தொடர்பான வழக்கை 6 மாதங்களுக்கு முன்பு நீக்கி, மதன் ரவிச்சந்திரனை களமிறக்கி இருக்கிறார்கள்.
திமுகவினருக்கு திராணி இருந்தால் ஆருத்ரா வழக்கை சி.பி.ஐ-யிடம் மாற்றி உண்மையை கண்டறியுங்கள். தொண்டர்களுக்கு வாய்ப்பை வழங்குவதே எங்களின் நோக்கம். எதற்கும் துணிந்தே அரசியல் வாழ்க்கைக்கு வந்துள்ளோம்" என்று பேசினார்.