Symphony Sumo 75 XL | Crompton Optimus 65 Litre Desert | Orient Electric CD5003H 50 Liter Air Cooler (Photo Credit: Amazon)

ஏப்ரல் 14, (Technology News): கோடைகாலம் (Summer Season) தொடங்கிவிட்டால் பலருக்கும் வெயில் (Heat Wave) சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். சிலர் தங்களின் வசதிக்கேற்ப ஏசி (Air Conditioner) வாங்கி தங்களின் வீடுகளில் பொருத்திக்கொள்வார்கள். இரவு வேளைகளில் அவர்கள் ஏசி இல்லாமல் உறங்கமாட்டார்கள் என்ற நிலையும் இருக்கும்.

இன்னும் சிலரோ தங்களின் குறைந்தபட்ச வசதிக்கேற்ப ஏர் கூலர்களை (Air Cooler) வாங்கி உபயோகம் செய்வார்கள். இன்று நாம் ஏர் கூலர்களில் உள்ள மாடல் மற்றும் அதன் திறன், சிறந்த ஏர் கூலர்கள் போன்றவை குறித்து தெரிந்துகொள்ளலாம். சந்தைகளில் Symphony Sumo, Crompton, Bajaj நிறுவனங்களின் ஏர் கூலர்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. இதில் நடுத்தர மக்களின் விருப்பத்திற்கேற்ப Crompton மற்றும் Bajaj நிறுவன கூலர்கள் விற்பனையாகின்றன.

1. Symphony Sumo 75 XL Powerful Desert Air Cooler:

சிம்போனி நிறுவனத்தின் Desert Air Cooler பிளாஸ்டிக் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது. 75 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஏர் கூலர், வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைத்தும் இயக்க கூடிய ஏர் கூலர் ஆகும். இதன் எடை 13.4 கிலோ இருந்தாலும், சக்கரங்கள் இருப்பதால் நாம் விரும்பிய இடத்திற்கு எளிதில் கொண்டு செல்ல இயலும். வீட்டின் அறைக்கு தேவையான குளுமையை வழங்கும் சிம்பொனி சுமோ ஏர் கூலர், அமேசான் விற்பனைத்தளத்தில் ரூ.15,400 க்கு விற்பனை செய்ய்யப்டுகிறது. Family Trapped Lift: லிப்டில் சிக்கிய குடும்பத்தினர்.. பதைபதைப்பு நிமிடங்கள்.. காப்பாற்றிய தீயணைப்பு படை அதிகாரிகள்.!

2. Crompton Optimus 65-Litre Desert Cooler:

கிராம்ப்டன் நிறுவனத்தின் Optimus 65 லிட்டர் அளவு கொண்ட ஏர் கூலர், பிளாஸ்டிக் கட்டமைப்போடு உபயோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏர் கூலர் 14.9 கிலோ எடை கொண்டது ஆகும். இதனை வீட்டின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் உபயோகம் செய்துகொள்ளலாம். கிராம்ப்டன் நிறுவனத்தின் Optimus Desert Air Cooler ரூ.14,899 க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

3. Orient Electric CD5003H Desert Air Cooler:

ஓரியண்ட் நிறுவனத்தின் CD5003H Desert ஏர் கூலர், பிளாஸ்டிக் கட்டமைப்புடன் கொண்ட ஏர் கூலர் ஆகும். இது 50 லிட்டர் கொள்ளளவுடன், 16.5 கிலோ எடை கொண்டது. சுமார் 18.3 மீட்டர் தூரம் வரை காற்றை வீசும் தன்மை கொண்டது. இந்த ஏர் கூலர் சந்தையில் ரூ.13,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வீட்டின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் உபயோகம் செய்து கொள்ளலாம்.

4. Crompton Ozone Desert Air Cooler:

கிராம்ப்டன் நிறுவனத்தின் Ozone Desert ஏர் கூலர், பிளாஸ்டிக் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது ஆகும். இது 55 லிட்டர் முதல் 75 லிட்டர் வரை கொள்ளளவு கொண்டது. அதன் கொள்ளளவுக்கு ஏற்ப விலை இருக்கும். 5.3 கிலோ எடையுள்ள ஏர் கூலர், 55 லிட்டர் கொள்ளளவுடன் சந்தையில் ரூ.10,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வீட்டின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் உபயோகம் செய்துகொள்ளலாம்.

5. Bajaj Platini PX97 Torque 36-Litres Personal Air Cooler:

பஜாஜ் நிறுவனத்தின் PX97 Torque 36 லிட்டர் எடையுள்ள ஏர் கூலர், தனிப்பட்ட நபருக்கு உபயோகம் செய்யும் வண்ணம் இருக்கும் ஏர் கூலர் ஆகும். இதன் எடை 8.7 கிலோ ஆகும். 30 அடி வரை காற்றை தரும். இந்த ஏர் கூலர் சந்தையில் ரூ.5,899 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  Man Killed: திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மேலாளர்.. கட்டிவைத்து அடித்தே கொன்ற பயங்கரம்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.! 

Note: ஏர் கூலர்கள் குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றின் தன்மை, திறன், நிறுவனத்திற்கேற்ப பொருளின் தரம், விலை என அனைத்தும் மாறும். ஒரேயொருவர் உபயோகம் செய்ய Personal Air Cooler வாங்குவது, வீட்டின் அறைக்கு உபயோகம் செய்ய சாதாரண Desert Air Cooler போன்றவை நல்லது.

நிறுவனங்களை பொறுத்தமட்டில் தொடக்கத்தில் கூறியவாறு Symphony, Crompton, Bajaj போன்றவை நல்ல செயல்திறனுடன் இயங்கும் தன்மை கொண்டது என்பதால், அதனை தேர்வு செய்யலாம். நீரின் கொள்ளளவை பொறுத்து அவற்றுக்கு நாம் நீர் நிரப்பும் வேலை இருக்கும்.

அதேபோல, சத்தம் இல்லாத ஏர் கூலர்கள் என்பது இருந்தாலும், அதன் விலை அதிகமாக இருக்கும். பல ஏர்கூலர்கள் பேனை போன்று கொஞ்சம் சத்தம் ஏற்படுத்துபவையே. இவற்றால் சிலருக்கு அசௌகரியம் இருக்கலாம், சிலர் அதனை பெரிதாக எடுக்கமாட்டார்கள். ஆதலால், ஏர்கூலர் வாங்க செல்வோர் அருகே இருக்கும் ஷோரூம் போன்றவற்றுக்கு சென்று உங்களின் விருப்பத்திற்கேற்ப அதனை தேர்வு செய்யலாம்.