Gold Silver Price: தமிழ் புத்தாண்டு நாளில் தங்கம் விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Silver Price: தமிழ் புத்தாண்டு நாளில் தங்கம் விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன..?
Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 14, சென்னை (Chennai News): உலகளவில் நடைபெறும் போர்கள், அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தக முதலீடுகள், இதனால் ஏற்படும் பொருளாதார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை தற்போது ரூ.70 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. பங்குச்சந்தையின் தொடர் வீழ்ச்சியால் தங்கம் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. Gold Silver Price: ரூ.70,000 ஐ தாண்டியது தங்கம் விலை.. புதிய உச்சம்.. நகை பிரியர்களுக்கு பேரிடி.!

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை, தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று (ஏப்ரல் 14) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.15 சரிந்து, கிராம் தங்கம் ரூ.8,755க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.120 சரிந்து, ஒரு சவரன் ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலை கிராமுக்கு ரூ.2 சரிந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.108க்கும், வெள்ளி கிலோ ரூ.1,08,000க்கு விற்கப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Apr 14, 2025 11:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).