Gold Rate: பட்ஜெட் 2025 எதிரொலி.. தங்கத்தின் விலை ஒரேநாளில் இரண்டாவது முறை கிடுகிடு உயர்வு.!

இன்றைய தங்கம் விலையை (Today Gold Rate), லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

Gold Rate: பட்ஜெட் 2025 எதிரொலி.. தங்கத்தின் விலை ஒரேநாளில் இரண்டாவது முறை கிடுகிடு உயர்வு.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 01, சென்னை (Chennai News): உலகளவில் தங்கத்தின் மீதான நுகர்வு, போர்ப்பதற்றம், தேசிய அளவில் மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக, தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த சில வாரம் வரையில் ரூ.55,000 வரை இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.60,000-ஐ கடந்து சென்று விட்டது. Budget 2025: பட்ஜெட் 2025 அறிவிப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ.! 

சென்னையில் இன்றைய தங்கம் விலை (Today Gold Rate in Chennai):

இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 61,960-க்கும், கிராம் ரூ. 7,745-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ரூ.1,07,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பட்ஜெட் தாக்கல் காரணமாக இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் தற்போது சென்னையில் 22 கேரட் மதிப்புள்ள ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 62,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ. 60 உயர்ந்து, ரூ. 7,790 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றம் இன்றி ரூ. 1,07,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

(The above story first appeared on LatestLY on Feb 01, 2025 05:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).