Gold Silver Price: மீண்டும் மெல்ல உயரத்தொடங்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மே 19, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனையால் இந்திய முதலீட்டு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சென்னையில் ரூ.74,000 கடந்தும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. வானிலை: இன்றும், நாளையும் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. லிஸ்ட் இதோ.!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இந்நிலையில், மே 19ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை, தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று (மே 19) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.8,755க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து, வெள்ளியின் விலை ரூ.1,09,000க்கு விற்கப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on May 19, 2025 09:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

