Gold Silver Price: சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது தங்கம் விலை; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
வரலாறு காணாத உச்சம்பெற்றுள்ள தங்கத்தின் விலை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பது நகை பிரியர்களிடையே சோகத்தை தருகிறது.
செப்டம்பர் 16, சென்னை (Chennai News): உலகளவில் நிலவி வரும் பொருளாதார பிரச்சனை, உக்ரைன் - ரஷியா போர், இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர் உட்பட பல்வேறு காரணங்களால் பதற்ற சூழல் அதிகரித்து இருக்கிறது. இதனால் உலகளவில் நிலவி வரும் பங்குசந்தைகளில் தொடர் ஏற்ற-இறக்கம் என நிலையற்ற சூழல் ஒவ்வொரு நாடுகளையும் பல்வேறு விதமான பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொள்ள காரணமாக அமைகிறது. இதனால், இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. HUID Number: தங்கம் வாங்க போறீங்களா? அப்போ 6 இலக்க எண் இருக்கான்னு கண்டிப்பா செக் பண்ணிக்கோங்க..!
10 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்த விலை:
கடந்த 2014ம் ஆண்டு வரையில் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட தங்கம், இன்று 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்ந்து சவரன் தங்கம் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்க நகையை வாங்க நினைப்போர் தொடர்ந்து விலையேற்றத்தால் பரிதவித்து வருகின்றனர். மேலும், இந்த விலை மேலும் இரட்டிப்பாக வாய்ப்புகள் அதிகம் என நகை விற்பனையாளர்களும் தெரிவித்து வருகின்றனர். உலகளவில் நிலவும் பல்வேறு சூழல்களால், தங்கத்தின் விலை என்பது எதிர்காலத்தில் குறைய வாய்ப்புகளே இல்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இன்று (Gold Silver Price Today) ரூ.55 ஆயிரத்தை கடந்தது:
இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.600 உயர்ந்து, சவரனுக்கு ரூ.55,680 க்கு விற்பனை செய்யப்படுகிறது, கிராம் தங்கத்தின் விலை ரூ.6,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.98,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Sep 21, 2024 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

