Gold Silver Price: ரூ.58 ,000 ஐ நெருங்குகிறது.. தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு..!

வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்த நிலையில், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

Gold Silver Price: ரூ.58 ,000 ஐ நெருங்குகிறது.. தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு..!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஜனவரி 02, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. TN Govt Announcement: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எல்லைகள் விரிவாக்கம்; முழு விபரம் இதோ.! அரசாணை வெளியீடு.! 

இன்றைய தங்கம் விலை (Today Gold Price in Chennai):

இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, இன்று சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.57,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.7,180 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலை நேற்று கிலோ ரூ.98,000 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிலோ ரூ.1000 உயர்ந்து, ரூ.99,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Jan 02, 2025 09:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).