Gold Silver Price: 72,000ஐ கடந்த தங்கம்.. சவரனுக்கு ரூ.1120 உயர்வு.. உச்சக்கட்டத்தில் இன்றைய தங்கம் விலை..!
சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.72,480 விற்பனை செய்யப்படுகிறது.
ஜூன் 02, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனையால் இந்திய முதலீட்டு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சென்னையில் ரூ.74,000 கடந்தும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன.
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
ஜூன் 02ஆம் தேதியான இன்று காலை, தங்கத்தின் விலை சற்று உயர்ந்து இருந்தது. 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,950க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்த தங்கத்தில் விலை :
இன்று மாலை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,060 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலையானது கிட்டத்தட்ட ரூ.1120 உயர்ந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

