Today Gold Rate: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
உச்சத்திலேயே இருந்து வரும் தங்கத்தின் விலையில், இன்று ரூ.880 என்ற அளவில் வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
பிப்ரவரி 15, சென்னை (Chennai News): உலகளாவிய போர் பதற்றம், அமெரிக்க பங்குச்சந்தை வர்த்தக முதலீடுகள், பொருளாதார விஷயங்கள் என பல்வேறு விஷயங்களால் இந்தியாவில் தங்கம் விலை என்பது கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் வரை ரூ.53 ஆயிரம் என்ற நிலையில் இருந்த சவரன் தங்கத்தின் விலை, தற்போது ரூ.64 ஆயிரம் என்ற நிலையை அடைந்துவிட்டது. கிட்டத்தட்ட கடந்த சில மாதங்களில் மட்டுமே தங்கத்தின் விலை ரூ.14 ஆயிரம் வரை சிறுகச்சிறுக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இந்தியாவில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், அதனை வாங்குவோரின் எண்ணிக்கை மாற்றமில்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக ரூ.64 ஆயிரத்தை கடந்து சென்ற தங்கம் விலை, லேசான இறக்கத்தை சந்தித்து இருக்கிறது. அந்த வகையில் இன்று சவரன் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து, கிராம் தாகம் விலை ரூ.7880 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கத்தின் விலை ரூ.880 குறைந்து சவரன் தங்கம் விலை இன்று ரூ.63040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.108000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Feb 15, 2025 09:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

