Murder Among Friends: சென்னை ஓட்டேரி ராயன் படம் பார்க்கும்போது தகராறு ; முன்விரோத கொலை..!

சென்னை ஓட்டேரியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரு நண்பா்கள் கைது செய்யப்பட்டனா்.

Murder Among Friends: சென்னை ஓட்டேரி ராயன் படம் பார்க்கும்போது தகராறு ; முன்விரோத கொலை..!
Murder (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 14, சென்னை (Chennai News): சென்னை ஓட்டேரி, பி.எஸ்.மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சிராஜ் (30). இவர், நேற்று மதியம் ஓட்டேரி பழைய மாநகராட்சி கட்டிடத்தின் உள்ளே இம்ரான் (30), முகமது கலீல் (28) ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த இருவரும் சிராஜின் கழுத்தில் வெட்டியதுடன் கத்தியால் அவரது மர்ம உறுப்பையும் வெட்டி வீசினர். பின், ஆட்டோவில் ஏறி ஓட்டேரி காவல் நிலையத்தில் கத்தியுடன் சரண் அடைந்தனர்.

அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சரணடைந்தவர்களிடம் ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தினார். அதில், ஓட்டேரி மகாலட்சுமி திரையரங்கில் 10 நாட்களுக்கு முன் ராயன் படம் பார்த்து கொண்டிருந்த சிராஜ், முன் வரிசையில் அமர்ந்து படம் பார்த்தார். Two Injured After Dog Bite: தெருநாய் கடித்து 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் படுகாயம்..!

பின்னால் உள்ள வரிசையில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த இம்ரான் முகமது கலீல், சிராஜ் மீது விழுந்தார். இதனால், அவர்களையும், அவரது தாய் குறித்தும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் அப்போதே இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். ஆனாலும் இருவருக்குமிடையே மோதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் மது அருந்த அழைத்து கொலை செய்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on Aug 14, 2024 04:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).