Two Injured After Dog Bite: தெருநாய் கடித்து 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் படுகாயம்..!
செங்கல்பட்டில் ஒரே நாளில் தெருநாய் கடித்து சிறுவன் உட்பட 2 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 14, செய்யூர் (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் டேனியல். இவரது மகன் ஜெப்ரின் (வயது 4), நேற்று (ஆகஸ்ட் 13) காலை வீட்டின் எதிரில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வெறிபிடித்த நாய், சிறுவரின் வலது தோள்பட்டை பகுதியில் பலமாக கடித்து (Dog Bite) குதறியது. இதில், படுகாயமடைந்த சிறுவன் வலியில் துடித்துள்ளான். இதனை பார்த்த சிறுவனின் பெற்றோர், உடனடியாக மீட்டு செய்யூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Young Girl Gang Raped: இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம்; சிறுவன் உட்பட 4 பேர் கைது..!
அதேபோல், அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 30) என்பவரையும், வலது காலில் அந்த நாய் கடித்துவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளது. இப்படி ஒரேநாளில் தொடர்ந்து, 2 பேரை நாய் கடித்திருப்பது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றி வரும் தெருநாய்களை பிடிக்க, துறைச்சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 14, 2024 12:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

