ஏப்ரல் 18, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற அவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இதுதொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடுதல் பணியை மேற்கொண்டு வந்தனர். Car-Bus Accident: தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலி..!

இந்நிலையில், சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து (Kidnapped And Raped) வைத்துள்ளது தெரியவந்ததை அடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் சிறுமியை மீட்டு, சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இதனையடுத்து, அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (வயது 27) என்பவர் சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடத்தி சென்று அவரது வீட்டில் அடைத்து வைத்துள்ளார். பின்னர், அவருடைய நண்பரான ரமேஷ் என்பவரும் சேர்ந்து சிறுமியை கொடூர முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, காவல்துறையினர் ராஜபாண்டி மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதில், கைதான ரமேஷ் என்பவர் ஊர்க்காவல் படையில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பாதிக்கப்பட்ட மாணவியை பத்திரமாக மீட்டு அரசு காப்பகத்தில் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.