ஏப்ரல் 18, சாங்லி (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாங்லி மாவட்டத்தில் தனியார் பேருந்து மீது மகிழுந்து ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் (Bus Car Crash In Sangli) 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இச்சம்பவம் புதன் கிழமை மாலை நிகழ்ந்துள்ளது. Earthquake: ஜப்பான் நாட்டில் கடும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு..!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர் திருமண விருந்து முடித்துவிட்டு, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாங்லி மாவட்டம், சவர்டேவுக்கு மகிழுந்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், புனேவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜம்புல்வாடி அருகே உள்ள விஜாப்பூர்-குஹாகர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது இவர்கள் சென்ற மகிழுந்து பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், மகிழுந்தில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும், இருவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.