ஆகஸ்ட் 14, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான பி.எஸ்சி., பட்டதாரி பெண் ஒருவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 12) விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதேபகுதியை சேர்ந்த கவிதாசன் (வயது 25), அவரது நண்பர்கள் திவாகர் (வயது 27), பிரவீன் (வயது 20) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரும் கடத்தி சென்று கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பலாத்காரம் (Gang Rape) செய்துள்ளனர். மேலும், அதனை அவர்களது மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். 2-Year-Old Child Dies: 2 வயது குழந்தை தலை சிதறி மரணம்; தாயின் அலட்சியத்தால் கண்ணெதிரே நடந்த சோகம்.!
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் (Pocso Act) கீழ் வழக்குப்பதிவு செய்து, 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேரையும் நேற்று (ஆகஸ்ட் 13) கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.