Two Friends Drown To Death: நண்பர்களுடன் சென்ற சுற்றுலா.. எமனாக வந்த ராட்சத அலை.. 2 பேர் துடிதுடிக்க பலி..!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாமியார் பேட்டை கடற்கரையில் குளித்த போது அலையில் சிக்கி இருவர் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

Two Friends Drown To Death: நண்பர்களுடன் சென்ற சுற்றுலா.. எமனாக வந்த ராட்சத அலை.. 2 பேர் துடிதுடிக்க பலி..!
Four People Drown (Photo Credit: Pixabay)

ஜூலை 22, கடலூர் (Cuddalore News): சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தின் ஊழியர்கள், இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் இருசக்கர வாகனத்தில் கடலூருக்கு சுற்றுலா வந்தனர். அப்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாமியார் பேட்டை கடலில் குளித்த போது சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஷாம்சுந்தர் (26), கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த கோகுல்பிரசாத் (26) ஆகியோர் ராட்சத அலை சிக்கினர். Game Gone Wrong: தூக்கிட்டது போல விளையாடி, துள்ளத்துடிக்க உயிரை விட்ட சிறுவன்; நெஞ்சை பதறவைக்கும் இறுதி நிமிட காட்சிகள்.!

அதனைத் தொடர்ந்து இருவரும் மீட்க பட்டு 108 ஆம்புலன்ஸில் பரங்கிப்பேட்டை மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் (Drown To Death), அவர்கள் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jul 22, 2024 03:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).