Mysterious Gang Stabbed: திருவிழா கூட்டத்தில் கத்திக் குத்து; 4 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்குதல்..!
மதுரையில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல், திருவிழா கூட்டத்தில் வாலிபரை கத்தியால் குத்திக்கொன்றுள்ளனர்.
ஏப்ரல் 24, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் கார்த்திக். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தி பகுதியை சேர்ந்த சோனைமுத்து (வயது 28). நண்பர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து மதிச்சியத்தில் துணிகள் தேய்க்கும் கடை (Laundromat) ஒன்றை நடத்தி வந்துள்ளனர். Itel S24 Smart Phone Launch: ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்; பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களுடன் வெளியீடு..!
இந்நிலையில், நேற்று காலை மதுரை வைகை ஆற்றுப்பகுதிக்கு இவர்கள் இருவரும் சென்றுள்ளனர். அங்கு திருவிழா கூட்டத்தில், 4 பேர் கொண்ட கும்பல் சோனைமுத்து, கார்த்திக் ஆகியோரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் சோனைமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும், கார்த்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக, மதிச்சியம் காவல்துறையினர் ஆழ்வார்புரத்தை சேர்ந்த சதீஷ் மற்றும் அவருடன் இருந்த 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கார்த்திக்கின் மனைவியும், சதீஷூம் தொடர்ந்து கடந்த சில நாட்களாக செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர். இதனால் கார்த்திக் ஆத்திரமடைந்து மனைவியை கண்டித்துள்ளார். இதன்காரணமாக, சதீஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக்கை கத்தியால் குத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Apr 24, 2024 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

