Itel S24 Smartphone (Photo Credit: @Atulbazaar X)

ஏப்ரல் 24, சென்னை (Technology News): இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை ஐடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐடெல் S24 (Itel S24 Smart Phone) குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை கொண்டு, பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சியை உண்டாக்குகிறது. Benefits Of Red Banana: தொற்று நோய் கிருமிகளை அழிக்கும் செவ்வாழைப்பழம்..! விவரம் இதோ..!

இதில் மீடியாடெக் ஹீலியோ G91 SoC, 8ஜிபி RAM , 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் பின்புற கேமராவில், இரட்டை கேமரா அமைப்பு: 108MP முதன்மை சென்சார் (சாம்சங் HM6 ISOCELL) f/1.6 அபெர்சர், EIS + QVGA டெப்த் சென்சார், செல்பி கேமரா 8MP ஆகிய முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 5000 mAh பேட்டரி திறன் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன், 6.6-இன்ச் HD+ LCD (720x1612) 90Hz டிஸ்ப்ளே மற்றும் OS ஆண்ட்ராய்டு 13 ஆகிய சிறப்பு அம்சங்களுடம் விற்பனைக்கு வந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

ஐடெல் S24 இன் முக்கிய விற்பனை சிறப்பு அம்சமாக 108 மெகா-pixel பின்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது பட்ஜெட் போன்களில் சிறப்பு மிக்கதாகும். பயனர்களின் அனுபவத்திற்காக 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.6-இன்ச் பெரிய திரையைக் கொண்டுள்ளது. மேலும், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி திறனுடன் முழு நாள் முழுவதுமாக பயன்படுத்த முடியும். 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் என்ற ஒரே வேரியண்ட்டில் ரூ. 9,999 என்ற விலையில் பட்ஜெட் விலையில் ஐடெல் S24 கிடைக்கின்றது. இது ஸ்டாரி பிளாக் மற்றும் டான் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் வருகிறது. இந்த போன் இந்தியாவில் அமேசான் மூலமாக கிடைக்கிறது. மேலும், ஏப்ரல் மாத இறுதி வாரத்திற்குள் ரிடெய்ல் கடைகளிலும் கிடைக்கும்.