Two Students Drown: நண்பர்களுடன் குளிக்க சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி; கதறி அழுத தாய்.. குடும்பத்தினர் சோகம்..!
வேலூரில் சக மாணவர்களுடன் குளிக்க சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 22, வேலூர் (Vellore News): வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி அருகே தீர்த்தகிரி மலைப்பகுதியில் உள்ள கல் குவாரியில், நண்பர்களுடன் குளிக்க சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சரவணன் (வயது 15), அபினேஷ் (வயது 15) என்ற இரு மாணவர்கள் டியூஷன் முடித்துவிட்டு, சக மாணவர்களுடன் குளிக்க சென்றபோது அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி (Drowning) உயிரிழந்துவிட்டனர். Baby Boy Born with 25 Fingers: கை-கால்களில் 25 விரலுடன் பிறந்த அதிசிய குழந்தை; இன்ப வெள்ளத்தில் பூர்த்திப்போன குடும்பம்.!
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடலை மீட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த இரு மாணவர்களின் கதறி அழுதனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து பேரூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கல் குவாரிகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதனை தடுக்க அதனை சுற்றி தடுப்பு வேலி அமைத்திடவும், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Jul 23, 2024 06:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

