ஜூலை 22, பாகல்கோட் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட்டை மாவட்டம், பன்ஹாட்டி பகுதியில் வசித்துவரும் நபர் குருப்பா கோனூர். இவரின் மனைவி பாரதி (வயது 35). தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் பாரதி கர்ப்பமாகி இருக்கிறார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாரதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு அங்குள்ள சன்சைன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். Rider Dies after Mobile Explodes: ஸ்மார்ட்போன் வெடித்ததால் சோகம்; இருசக்கர வாகன ஓட்டி துள்ளத்துடிக்க பலி.!
25 விரலுடன் பிறந்த குழந்தை:
அங்கு பாரதிக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்த நிலையில், கை-கால்களில் சேர்த்து 25 விரல்கள் (Baby born with 25 Fingers in Karnataka) இருந்துள்ளன. இதனைக்கண்டு பூரிப்படைந்துபோன குடும்பத்தினர், கடவுள் புவனேஸ்வரி தேவியின் அருளால் தங்களின் மகன் பிறந்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விஷயம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது, அவர்களின் கைகள் அல்லது கால்களில் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு விரல்கள் கூடுதலாக இருக்கும்.
அரிதிலும் அரிது:
அது அரிதான நிகழ்வாகவும் கவனிக்கப்படுகிறது. ஆனால், இவ்வாறான விஷயம் அரிதிலும் அரிது. இதனை மருத்துவ நிலையில் பாலிடாக்டிலி என்ற அரிய நிலையாக கூறுவார். குரோமோசோம்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக இவ்வாறான நிகழ்வு நடைபெற்றுள்ளது. குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தாயும்-சேயும் நலமுடன் இருக்கிறார்கள் என தெரிவித்தனர்.