Chennai Shocker: காதல் விவகாரத்தில் பயங்கரம்; நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனையில் நடந்த பரபரப்பு சம்பவம்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!

விடுதிக்கு திரும்பிக்கொண்டு இருந்த நபரின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டல் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

Chennai Shocker: காதல் விவகாரத்தில் பயங்கரம்; நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனையில் நடந்த பரபரப்பு சம்பவம்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!
Captured Gun & Youth Amith Kumar (Photo Credit: YouTube)

ஏப்ரல் 15, சென்ட்ரல் இரயில் நிலையம் (Chennai News): வேலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ரோகன். இவர் சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரியில், முதல் ஆண்டு ஆர்த்தோ முதுநிலை பட்டம் பயின்று வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல வகுப்புக்கு சென்றுவிட்டு, மீண்டும் விடுதி நோக்கி வந்துகொண்டு இருந்தார். அச்சமயம், சென்னை சென்ட்ரல் (Youth Threatening by Gun Point in Chennai) இரயில் நிலையத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ரோகனின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டி இருக்கின்றனர். பயத்தில் ரோகன் கூச்சலிட்டதைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் துப்பாக்கி வைத்திருந்தவரை மடக்கிப்பிடித்து இருக்கின்றனர். Car Caught Fire 7 Burnt Alive: லாரியின் பின்னால் மோதிய கார்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி துள்ளத்துடிக்க பலி., பதறவைக்கும் காட்சிகள்.! 

காதல் விவகாரத்தில் நடந்த பகீர் சம்பவம்: பின் அவர் காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய நபரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ரித்திக் குமார் என்பது தெரியவந்தது. அவரின் நண்பரான அமித் குமார் என்பவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அதாவது, அமித் குமார் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் அமித்தை தவிர்த்துவிட்டு திடீரென ரோகனுடன் பழகி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் காதல் விவகாரத்திற்கு கையில் துப்பாக்கியுடன் வந்து அமித் மற்றும் ரித்திக் ஆகியோர் மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் அமித் குமார் மற்றும் ரித்திக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

(The above story first appeared on LatestLY on Apr 15, 2024 08:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).