Rajasthan Car Fire Accident 7 Died (Photo Credit: @sirajnoorani X)

ஏப்ரல் 15, ராஜஸ்தான் (Rajasthan News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர், நேற்று ஞாயிற்றுக்கிழமை இராஜஸ்தான் (Rajasthan Car Hits Behind Truck 7 Died Burn Alive) மாநிலத்தில் உள்ள சுரு மாவட்டம், சல்சார் பாலாஜி (Churu Salasar Balaji Temple) ஆஞ்சநேயர் கோவிலுக்கு தங்களுக்கு சொந்தமான காரில் பயணம் செய்துகொண்டு இருந்தனர். இவர்கள் அனைவரும் மீரட் தொகுதி பாஜக எம்.எல்.ஏ சத்யப்ரகாஷ் அகர்வாலின் உறவினர்கள் ஆவார்கள்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து: இந்நிலையில், இவர்களின் கார் சுரு நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தபோது, ராஜஸ்தானின் சிகார் பகுதியில் விபத்து ஏற்பட்டது. முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் மீது, அதிவேகத்தில் வந்த கார் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. கார் லாரியின் மீது மோதிய வேகத்தில் தீப்பிடித்த காரணத்தால், காருக்குள் பயணித்த அனைவரும் வெளியே வர இயலாமல் சிக்கிக்கொண்டனர்.

பலியானோரின் உடல்கள் மீட்பு: அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தைக்கண்டு அதிர்ச்சியடைந்து, அவர்களை மீட்க முயற்சித்தும் பலனில்லை. அதற்குள் காரும், அதற்குள் இருந்தவர்களும் பற்றி எரியத்தொடங்கினர். பின் இதுகுறித்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து கருகிய நிலையில் இருந்த உடலை மீட்டனர். Weather Update: அடுத்த 3 மணிநேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Accident (File Pic)

உயிரிழந்தவரின் விபரம்: இவ்விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் நீலம் கோயல், அஷுடோஷ் கோயல், மஞ்சு பிண்டல், ஹர்திக் பிண்டல், ஸ்வாதி பிண்டல், 7 வயதுடைய குழந்தை திக்ஸ்ஹா மற்றும் 4 வயதுடைய குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கியாஸ் உதவியுடன் இயங்கும் கார், காட்டன் துணிகளை ஏற்றுக்கொண்ட லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

அரைகுறையாக எரிந்த செல்போன் உதவியது: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளத்தை காண, காருக்குள் அரைகுறையாக எரிந்த செல்போனில் இருந்த சிம் கார்ட் உதவி செய்துள்ளது. இதன் வாயிலாகவே அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விரைந்து கண்டறிந்து தகவல் தெரிவித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நடந்தபின் எடுக்கப்பட்ட பதைபதைப்பு காட்சிகளும் வெளியாகியுள்ளன.