Pest in Liquor: "சாகத்தான் குடிக்கிறன், அதிலும் பூச்சியா?".. விரக்தியில் பொங்கி மாற்று மதுபானம் வாங்கி ஊற்றிய குடிமகன்.. வைரல் வீடியோ.!
தான் வாங்கிய சரக்கில் கரப்பான் பூச்சி இருக்க, அந்த சரக்கை கொடுத்துவிட்டு மாற்று சரக்கு வாங்கி அடித்த குடிமகனின் அட்ராசிட்டி வீடியோ குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜனவரி 18, சித்தேரி: விழுப்பும் மாவட்டத்தில் (Viluppuram) உள்ள சித்தேரி கிராமத்தில் அரசு மதுபானக்கடை (Tasmac Liquor Shop) செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக்கடையில் Mc Dowells Brandy குவாட்டர் வாங்கிய குடிமகன், அதனை ஆவலோடு குடிக்க காத்திருந்துள்ளார்.
அப்போது, அவரின் கண்களுக்கு பேரதிர்ச்சியாக குவாட்டர் பாட்டிலில் பூச்சி செத்து மிதப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடிமகன், மீண்டும் அதனை கடைக்கு கொண்டு சென்று மாற்று மதுபானம் தரும்படி கேட்டுள்ளார்.
கடைக்காரர்களும் அவர் கொடுத்த மதுபானத்தை வாங்கி வைத்துக்கொண்டு, மாற்று மதுபானம் கொடுத்து அனுப்பியதாக தெரியவருகிறது. முன்னதாக குடிமகன் போதையில் இருந்தாலும், அதனை விடியோவாக எடுத்து வைத்துக்கொண்டார். Corona Vaccine: கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் பக்கவிளைவு ஏற்படுகிறதா?.. ஐசிஎம்ஆர் பரபரப்பு பதில்..!
அந்த வீடியோவில் அவர் பேசுகையில், "இந்த சரக்கு குடிக்க வாங்கி வந்தேன். நானும் குடிகாரன் தான்., நல்லவன் என்று கூறவில்லை. ஆனால், விழுப்புரம் முத்தாம்பாளையத்தில் புதிதாக திறந்த ஒயின்ஷாப்பில் என் கைப்பட சரக்கு வாங்கி வந்தேன்.
VSOP பிராந்தி நான் சாப்பிட வாங்கி வந்தேன். சீல் கூட திறக்கவில்லை. குடிக்க வந்த சரக்கில் பூச்சி இருக்கிறது. நீங்களே பாருங்கள். குடித்து விரைந்து சாகவே சரக்கு வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால், அதிலும் விரைவு என்றால் எப்படி?. இதை கேட்டா நீ ஏன் குடிக்க வந்தாய்? என கேட்பார்கள்.
குடித்து சாவதில் தமிழ்நாட்டுக்கு எந்த பொறுப்பும் இல்லையா?. நான் எனது கண்களுக்கு தெரியாமல் சரக்கை குடித்திருந்தால் யார் பதில் சொல்வது?" என்று தெரிவித்தார்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 18, 2023 08:59 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(The above story first appeared on LatestLY on Jan 18, 2023 08:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

