உயிரிழந்த குழந்தை கோகுலராஜ் / மரணம் மாதிரி படம் (Photo Credit: Facebook / Pixabay)

ஆகஸ்ட் 25, செஞ்சி (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, அந்தியூர் (Anthiyur, Gingee) கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரின் மனைவி பவானி. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து, 7 வயது பெண் குழந்தை, கோகுல்ராஜ் என்ற 3 வயது ஆண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர்.

தம்பதியின் 7 வயது மகள், அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வருகிறார். தினமும் பள்ளியின் வேன் மூலமாக அவர் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலையிலும் சிறுமி தனது பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

பின்னர், மாலையில் வீடு திரும்பும் மகளை அழைக்க தயார், தனது கைக்குழந்தையுடன் காத்திருந்துள்ளர். மகளின் வேன் வந்தபோது, 3 வயது மகனை கீழே இறக்கிவிட்டு மகளை வரவேற்று இருக்கிறார். சிறுவன் எதிர்பாராத விதமாக தாயாருக்கு அருகே சென்றதாக தெரியவருகிறது. Pragnanandha Takes Runner-Up: இறுதிக்கட்டம் வரை போராடி இரண்டாம் இடத்தை கைப்பற்றினார் பிரக்ஞானந்தா: டை பிரேக்கர் சுற்றில் கார்ல்சன் வெற்றி.!

இதனை யாரும் கவனிக்காத நிலையில், வேன் ஓட்டுநர் வேனை இயக்கியதால் சக்கரத்தின் அடியில் சிக்கிய சிறுவனின் தலையில் வேன் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சிறுவன் தலைநசுங்கி பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.