ஆகஸ்ட் 24, பாக்கூ (Sports News): அஜர்பைஜானில் (Ajerbaijan) நடைபெற்றுக் கொண்டிருக்கும் செஸ் உலகக் கோப்பை தொடர் (World Chess Championship) பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. அரையிறுதிப் போட்டியில் அபாரமான வெற்றிபெற்று பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியாவையே பெருமைப்பட வைத்தது. அதைத்தொடர்ந்து இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை எதிர்த்து விளையாடினார்.
முதல் டை பிரேக்கர் சுற்றில் 47 நகர்வுகளை முன்வைத்தும் பிரக்ஞானந்தாவால் ஆட்டத்தை கைப்பற்ற முடியாமல் போனது. 1-0 என்ற வித்தியாசத்தில் கார்ல்சன் வெற்றிபெற்றார். இதனால் இரண்டாவது டை பிரேக்கரில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் பிரக்ஞானந்தா.
18 year old Indian Champ is now craze of chess fans worldwide.#praggnanandha pic.twitter.com/ZidWQ1pbxp
— Megh Updates 🚨™ (@MeghUpdates) August 24, 2023
இறுதிக்கட்டத்தில் மிச்சம்18 நிமிடங்களே பாக்கி இருந்த நிலையில் பிரக்ஞானந்தாவிற்கு எதிராக விளையாடிய இரண்டாவது டை பிரேக்கர் (Tie breaker) சுற்றை டிராவில் முடித்து கார்ல்சன் இறுதி போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார். கார்ல்சன் 1.5 – பிரக்ஞானந்தா 0.5 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டி நிறைவடைந்தது. கடைசி கட்டம் வரை விடாமுயற்சியுடன் விளையாடிய பிரக்ஞானந்தாவிடம் ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆட்டோகிராப் பெற்றனர்.