Youth Hanging Suicide: 27 வயது இளைஞர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை - காவல்துறையினர் தீவிர விசாரணை..!
சென்னையில் யூடியூப் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளைஞர் ஒருவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 03, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள கோடம்பாக்கம் அருகே உள்ள காமராஜ் காலனியில் வசித்து வருபவர் தினேஷ் (வயது 27). இவர் தனியார் யூடியூப் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த தினேஷ் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளார். அருகில் வசிக்கும் அவரது நண்பர் மணிகண்டன் என்பவர் நீண்ட நேரம் ஆன போதிலும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர், செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். பலமுறை முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியாததால், அருகில் உள்ளவர்களின் உதவியோடு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, தினேஷ் சமையலறையில் தூக்கில் (YouTube Channel Employee Hanging Death) தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், கோடம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். Gun Shooting In Toll Plaza: சுங்கச்சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் – ஊழியர்கள் இருவர் பலி..!
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தினேஷின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷின் செல்போனை கைப்பற்றி அதன் மூலம் எதுவும் தகவல் கிடைக்கக்கூடும் என்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Apr 05, 2024 10:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

