Gun Fire (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 03, தாட்டியா (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாட்டியா மாவட்டத்தில் சிருலா காவல்நிலைய எல்லைப் பகுதிக்கு உட்பட்ட ஒரு சுங்க சாவடியில் உள்ள ஊழியர்களை நோக்கி, நேற்று நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு (Mysterious Persons Fired At The TollGate) நடத்தினர். இதனால், ஊழியர்கள் அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடத்தொடங்கினர். இதில், இரண்டு பேர் அருகில் இருந்த விவசாய நிலப்பகுதிக்குள் செல்லும் போது, தவறி அங்கிருந்த கிணற்றில் விழுந்தனர். அதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். Teenager Forced A Young Woman: காதலிக்க மறுப்பு தெரிவித்த இளம்பெண் – கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது..!

இதுகுறித்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், கண்காணிப்பு கேமராவில் அனைத்து காட்சிகளும் பதிவாகியுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும், சிருலா காவல்நிலைய பொறுப்பாளர் நிதின் பார்கவா கூறுகையில், சம்பவத்தன்று 6 இருசக்கர வாகனத்தில் 12 பேர் வந்துள்ளதாகவும், 15 நிமிடங்களில் 30 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இன்று காலையில் தான் கிணற்றில் விழுந்து இறந்த உடல்களை வெளியே மீட்டு எடுத்து பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தோம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.