Apple Logo (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 20, கலிபோர்னியா (Technology News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐபோன் நிறுவனம் ஆப்பிள் (Apple iPhone). பயனர்களின் தகவல் பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்களின் காரணமாக ஆப்பிள் ஐபோன் சர்வதேச அளவில் பிரதான ஸ்மார்ட்போனாக இருந்து வருகிறது. பிற மின்னணு சாதனங்களையும் ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. Women Cheated by Lover: காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்துவிட்டேன்., ஆட்சியர் காலில் விழுந்து கதறிய இளம்பெண்.. கண்ணீர் சோகம்.! 

ரூ.136 இலட்சம் கோடி வருமானம்: இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஆப்பிள் ஐபோன் விற்பனை செய்ததன் மூலம் 1.65 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.136 ட்ரில்லியன் - ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி பணம் ஆகும்) வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டில் 235 மில்லியன் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த 2023ல் ஐபோன் பயனர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து இருந்தன. Actress Died: 36 வயது ஆபாச பட நடிகை தற்கொலை; ஜானி சின்சுடன் 20 வயதில் தொடங்கிய பயணத்திற்கு முற்றுப்புள்ளி..! 

10 ஆண்டுகளில் சாதனை படைத்த ஆப்பிள்: கடந்த 2013ல் 153.4 மில்லியன் வருமானம் ஈட்டிய ஆப்பிள் நிறுவனம், தற்போது 235 மில்லியன் அளவு வருமானத்தை உயர்த்தி இருக்கிறது. இது கடந்த பத்து ஆண்டுகளில் 53% அதிகம் ஆகும். ஆப்பிள் கடந்த 10 ஆண்டுகளில் 2.3 பில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. அதேசமயம் சாம்சங் 800 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளாது. கடந்த 2007ல் இருந்து ஆப்பிள் ஐபோன் பயன்பாடு முக்கிய அம்சமாக விளங்கி வருகிறது.