பிப்ரவரி 20, ஓஹியோ (Cinema News): அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணம், ஹாரிஸ் கவுண்டி பகுதியில் பிறந்து, மிசௌரியில் வளர்ந்தவர் கஃனே லின் கார்ட்டர் (Kagney Linn Carter). திரைப்பட ஆசையுடன் கலிபோர்னியாவுக்கு வந்து பாடகியாகி, சிறந்த நடன கலைஞராகவும் வலம்வந்த நடிகை பின்னாளில் ஆபாச படங்களில் நடித்து ரசிகர் பட்டாளத்தை பெற்றார். கடந்த 2008ம் ஆண்டு ஆபாச படங்களில் நடிக்க தொடங்கிய கார்ட்டர், பிரபல ஆபாச பட நட்சத்திரமாக விளங்கும் ஜானி சின்சுடன் தனது முதல் படுக்கை பகிர்ந்த காட்சியில் நடித்து வரவேற்பு பெற்றார். ஆபாச பட நடிகைகளை கௌரவித்து ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் சிறந்த பாலியல் காட்சி உட்பட பல்வேறு விஷயங்களுக்கு இவர் விருதுகளையும் பெற்றுள்ளார். Madurai Shocker: தேவர் ஜெயந்தி விழா, 10 பேர் எரித்துக்கொல்லப்பட்ட விவகாரம்; முக்கிய குற்றவாளி தலை சிதைத்து கொலை.. பழிக்குப்பழியாக படுபயங்கரம்.!

தொடரும் ஆபாச பட நடிகைகள் தற்கொலை: இந்நிலையில், நடிகை கஃனே லின் கார்ட்டர் தனது ஓஹியோ மாகாணத்தின் குயாஹோகா கவுண்டி குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார். அவரின் மறைவு கார்ட்டரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபாச பட உலகில் நடிக்கும் இளம் நடிகைகள் திடீரென தற்கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. 18 வயதுள்ள இளம் நடிகைகள் முதல் மூத்த ஆபாச பட நடிகைகள் வரை தற்கொலை செய்யும் சோகம் மாறவில்லை. தற்போது மறைந்த கார்ட்டருக்கும் 36 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.