Cisco Layoffs: சிஸ்கோ நிறுவனத்தில் 2-வது முறையாக பணிநீக்கம்; ஊழியர்கள் அதிர்ச்சி..!
அமெரிக்காவில் இயங்கி வரும் சிஸ்கோ நிறுவனம் தனது பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 10, சான் ஜோஸ் (Technology News): அமெரிக்காவில் சான் ஜோஸ் (San Jose), கலிபோர்னியாவை (California) தளமாகக் கொண்ட நெட்வொர்க்கிங் நிறுவனமான சிஸ்கோ (Cisco) இந்த ஆண்டு 2-வது முறையாக பணியாளர்களை பணிநீக்கம் (Layoffs) செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் சைபர் செக்யூரிட்டி () மற்றும் AI ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளதால், 2-வது முறையாக பணிநீக்கம் செய்ய முடிவுசெய்துள்ளது. இதன் அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Vivo V40 Pro: அசத்தலான அம்சங்களுடன் விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!
இந்நிலையில், கடந்த மாதம் பிப்ரவரியில் சிஸ்கோ பணிநீக்கம் செய்யப்பட்ட 4,000 ஊழியர்களை விட சற்று அதிகமாகவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி, நிறுவனம் சுமார் 84,900 நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. நிறுவனம் AI தயாரிப்புகளை இணைக்க முயற்சித்து வருகிறது, மேலும், 2025-ஆம் ஆண்டில் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள AI தயாரிப்பு ஆர்டர்கள் என்ற இலக்கை வலியுறுத்தியது.
ஜூன் மாதம் கோஹேர், மிஸ்ட்ரல் போன்ற AI ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்ய $1 பில்லியன் நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது. AI மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகிய துறைகளில் வளர, செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligence) பணிபுரியும் 20 ஸ்டார்ட்அப்களை கையகப்படுத்தி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

