ஆகஸ்ட் 10, சென்னை (Technology News): விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வி40 (Vivo V40) சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், விவோ வி40 மற்றும் விவோ வி40 ப்ரோ (Vivo V40 Pro Smartphone) ஆகியவை அடங்கும். முந்தைய V-சீரிஸ்களைப் போலவே, இதிலும் கேமராவில் அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதிவில் விவோ வி40 ப்ரோ மாடலை பற்றி பார்ப்போம்.
விலை மற்றும் விற்பனை விவரம்:
விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன் இரண்டு ரேம் மற்றும் இரண்டு சேமிப்பு விருப்பங்களில் இந்தியாவில் வெளியாகி உள்ளது.
8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ.49,999 மற்றும் 12GB ரேம் + 512GB மாடலின் விலை ரூ.55,999 ஆகும்.
இது Lotus Purple ஃபினிஷுடன் 3 வண்ண விருப்பங்களில் கிடைக்கும். Susan Wojcicki: யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ சூசன் வோஜஸிக்கி நுரையீரல் புற்றுநோயால் மரணம்..!
சிறப்பம்சங்கள்:
இதில், 6.78-இன்ச் FHD+ (2800×1260) AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.
இதனை இயக்க, MediaTek Dimensity 9200+ சிப்செட் இதில் நிறுவப்பட்டுள்ளது. இது பழைய Dimensity 9200 SoC-யின் மிகவும் சக்திவாய்ந்த பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஸ்மார்ட் போனில் சோனியின் IMX921 சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனைப் பயன்படுத்தும் 50MP முதன்மை கேமரா உள்ளது. மேலும், முன்பக்கத்தில் 50MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு 50MP கேமராக்கள் உள்ளன. இவை அனைத்தும் ZEISS-ஆல் ஆதரிக்கப்படுகின்றன.
இதில், Funtouch OS 14 உடன் Android 14-யில் இயங்குகிறது. V40 Pro உடன் மூன்று வருட முக்கிய OS அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி பேட்ச்களை வழங்குவதாக Vivo நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட் போனில், 5,500mAh பேட்டரி திறன் கொண்ட, 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது.