E Aadhaar App: அறிமுகமாகும் இ-ஆதார் செயலி.. இனி வீட்டில் இருந்தபடி மாற்றம் செய்யலாம்.!

மத்திய அரசு புதிய இ-ஆதார் செயலியை அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் வீட்டில் இருந்தபடி பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை ஸ்மார்ட்போனில் (E-Aadhaar App) எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

Digital Aadhaar Upgrade (Photo Credit : Youtube)

செப்டம்பர் 14, சென்னை (Technology News): தனிமனிதனின் அடையாளமாக அறிவிக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டைக்கான சேவையை எளிமையாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 'இ ஆதார் ஆப்' என்ற புதிய செயலி விரைவில் அறிமுகமாக உள்ளது. இதனால் பயனர்கள் ஆதார் மையங்களுக்கு செல்லாமலேயே தங்களது தகவல்களை ஸ்மார்ட் ஃபோனில் எளிதில் மாற்றிக் கொள்ளும் வகையில் தொழில்நுட்பங்கள் மற்றும் அம்சங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

டிஜிட்டல் ஆதார் மூலம் எளிதில் மாற்றலாம் :

தற்போது நடைமுறையில் 'எம்-ஆதார்' என்ற செயலி இருக்கிறது. அதேபோல இ ஆதார் செயலி டிஜிட்டல் வடிவமாக செயல்படும். இந்த டிஜிட்டல் ஆதார் மூலமாக ஒருவரின் பெயர், முகவரி, பிறந்த தேதி உட்பட பல்வேறு விபரங்களையும் மாற்றிக் கொள்ளலாம். அவசியம் இருப்பின் தேவையான இடங்களில் டிஜிட்டல் முறையிலும் அதனை பகிரலாம். ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன்களில் கூகுள் பிளே ஸ்டோரில் Early Access அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. Google Gemini 3D Ai Photo Editing: கூகுள் ஜெமினி ஏஐ போட்டோ ட்ரெண்டிங்.. அரசியல் முதல் நிகழ்வு வரை.. கைவரிசையை காண்பிக்கும் நெட்டிசன்கள்.!

விரைவில் இ-ஆதார் செயலி :

இந்த செயலி முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்றாலும் ஒரு சில சேவைகளை தற்போது முயற்சித்துக் கொள்ளலாம். விரைவில் இந்த சேவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பயனர்களே தங்களது விபரங்களை மாற்றிக் கொள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கைரேகை, கருவிழி போன்றவற்றை புதுப்பிக்க இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement