Zoho’s Arattai App Set for Big November Update (Photo Credit : @TimesNow X)

நவம்பர் 19, சென்னை (Technology News): இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (Zoho), அரட்டை எனும் தனது புதிய மெசேஜிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களிலும், இணையவேகம் குறைவாக இருந்தாலும் சிறப்பாக இயங்கும் வகையில் அரட்டை செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பயனர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மேம்பாடுகள் இல்லாத பகுதிகளிலும் இதனை உபயோகிக்கலாம். இந்த செயலியானது மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு 'மேட் இன் இந்தியா' (Made In India) என்ற சிறப்பை பெற்றுள்ளது. அரட்டை செயலி ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ், லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு டிவி போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் ஒரே நேரத்தில் 5 சாதனங்களில் கூட இணைத்து தங்கள் தகவல்களை எளிதாக அணுகலாம். OPPO Find X9 Series: இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ பைண்ட் X9 சீரிஸ்.. விலை எவ்வளவு?.. சிறப்பம்சங்கள் இதோ.!

உரையாடல்களுக்கும் பாதுகாப்பு:

முன்னதாக ஆடியோ, வீடியோ அழைப்புகளுக்கு எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் (End-to-End Encryption) வழங்கப்பட்டிருந்த நிலையில் உரையாடல்களுக்கு முழுமையான பாதுகாப்பு அம்சம் செயல்படுத்தவில்லை என பயனர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உரையாடல்களுக்கும் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக அரட்டை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் அரட்டை நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், காத்திருப்பு முடிந்து விட்டது.. உரையாடல்களுக்கும் முழுமையான பாதுகாப்பு அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் தகவலை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் மட்டுமே அதனை படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அரட்டை செயலியால் கூட தகவல்களை அணுக முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதியை மேம்படுத்திய அரட்டை நிறுவனம்: