Tamilnadu Rains (Photo Credit : @TamilTheHindu X)

அக்டோபர் 22, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடல், தெற்கு அரபிக்கடல், அந்தமான் தீவுகள் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் மழை (Tamilnadu Rains) தொடருகிறது. வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்தகட்ட நிலையை நோக்கி நகர்வதால், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் வடமாவட்ட பகுதிகளில் இன்று அதிக கனமழை (Heavy Rain Tamilnadu) எச்சரிக்கையாக ரெட் அலர்ட் (Red Alert in Tamilnadu) விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிகப்பு எச்சரிக்கை (Red Alert in Tamilnadu) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நேற்று முதலே மழை பல மாவட்டங்களில் வெளுத்து வாங்குகிறது. நள்ளிரவில் பெய்த மழையால் ஒருசில மாவட்டங்களில் மழைநீர் வீதிகளில் தேங்கி நிற்கிறது. TN School Colleges Holiday Due to Rain: ரெட் அலர்ட் எச்சரிக்கை.. தமிழ்நாட்டில் தொடரும் கனமழை.. பள்ளி-கல்லூரிகள் விடுமுறை.. 17 மாவட்டங்களுக்கு அறிவிப்பு.. முழு விபரம் உள்ளே.! 

இன்றைய வானிலை (Today Weather):

இன்று (அக். 22) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை (Tamilnadu Weather Update Today) பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. Tiruvallur: 2 மாசமா காணல.. மனைவியை பிளாஸ்டிக் ட்ரம்மில் அடைத்து கணவன் அரங்கேற்றிய கொடூரம்.. அதிரவைக்கும் பின்னணி.! 

காலை 10 மணிவரையில் தமிழ்நாட்டில் மழை (TN Rain Alert):

இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்துக்கான மழை முன்னெச்சரிக்கை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) வெளியிட்டுள்ளது. அதன்படி, காலை 10 மணிவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கான (Tamil Nadu Rain Today) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.