நவம்பர் 07, சென்னை (Technology News): கூகுள் (Google) நிறுவனத்தின் அங்கமான யூடியூப் (YouTube) எப்போதும் நமக்கு புதுமனையான அனுபவத்தை கொடுக்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக உருவாக்கப்பட்டுள்ளது. உலகளவில் பதிவிடும் பல்வேறு வீடியோக்களை வீட்டில் இருந்தவாறு நாம் பார்த்து மகிழ உதவுகிறது. யூடியூப் வீடியோ தளத்தை 2.6 பில்லியன் மக்கள் உபயோகம் செய்து வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 462 மில்லியன் மக்கள் யூடியூபை பயன்படுத்துகின்றனர். யூடியூப் தளத்தில் நமக்கு தேவையான, தேவையில்லாத பல காணொளிகள் நிறைந்து கிடக்கின்றன. அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, காணொளியினை பிரித்து வழங்கும் சேவையை யூடியூப் செய்து வருகிறது. யூடியூபில் நாம் பார்க்கும் வீடியோவை Watch History அமைப்பு சேமித்து வைக்கிறது. Refrigerator Tips: பிரிட்ஜ் கூலிங் ஆகவில்லையா? என்ன தவறுகள்? இந்த விஷயங்களை கவனிங்க மக்களே.!
வீடியோ தரம் உயர்த்தும் யூடியூப் AI:
இதன் மூலமாக பார்வையாளர் தான் பார்க்கும் வீடியோ சம்பந்தமான பல விடியோக்கள் அடுத்தடுத்து அவருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தொழில்நுட்பத்தால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் யூடியூப் பழைய குறைந்த குவாலிட்டி வீடியோக்களை தானாகவே HD, 4K மற்றும் Ultra HD தரத்திற்கு உயர்த்தும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் முந்தைய காலங்களில் 1080p க்கும் குறைவான தரத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் மட்டுமல்லாமல், இனி பதிவேற்றப்படும் புதிய வீடியோக்களும் AI மூலம் காட்சித் தரம் மேம்படுத்தப்படும்.
பயனர்களுக்கு அசத்தல் அனுபவம்:
பயனாளர்கள் வீடியோ அமைப்புகளில் உள்ள Super Resolution என்ற விருப்பத்தை இயக்கினால், யூடியூப் தானாகவே வீடியோ தரத்தை உயர்த்தி வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி தற்போது பயனாளர்களுக்கு படிப்படியாக வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட குவாலிட்டியில் வீடியோக்களை கண்டு மகிழலாம். இந்த செய்தி ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறு புறம் சிறுகுழந்தைகள் வீடியோ பார்ப்பதற்கு இன்னும் அதிகம் ஆசைப்பட்டு அடிமையாக வாய்ப்புள்ளதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.