Chat GPT Down (Photo Credit: Twitter)

ஜூலை 11 , தொழில்நுட்பம் (Technology News): ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபரான எலான் மஸ்க் தலைமையிலான குழு அறிமுகம் செய்த சாட் ஜிபிடி பயனருக்கு சொந்த மொழியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதால், இதற்கு மாற்றாக கூகுள் நிறுவனமும் தனது தரப்பு அப்டேட் வழங்கி சாட் ஜிபிடி-க்கு ஆப்பு வைக்க முயற்சித்து வருகிறது. Vignesh Shivan Status: பாலிவுட்டில் கலக்கும் அட்லீ., ஜவான் படம் மிகப்பெரிய வெற்றி அடையும்; இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டு.!

இந்த நிலையில், கடந்த சில மணிநேரமாகவே சர்வதேச அளவில் சாட் ஜி.பி.டி உபயோகம் செய்யும் நபர்களால், அதனை செயல்படுத்த முடியவில்லை. இதனால் ட்விட்டர் பக்கத்தில் சாட் ஜிபிடி தொழில்நுட்ப கோளாறு குறித்து ஹாஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.