Google Doodle Today: 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தனது பாணியில் வரவேற்ற கூகுள்: அசத்தல் கிளிக்ஸ் இதோ.!

சர்வதேச அளவில் 10 நாடுகள் கலந்துகொண்ட போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவே இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.

Google Doodle Today: 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தனது பாணியில் வரவேற்ற கூகுள்: அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
Google Doodle | ICC CWC 2023 Final (Photo Credit: LatestLY)

நவம்பர் 19, சென்னை (Technology News): 13வது ஐசிசி கிரிக்கெட் கோப்பை 2023 போட்டித்தொடர், இன்று தனது இறுதிக்கட்ட ஆட்டத்தை நிறைவுசெய்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இறுதி உலகக்கோப்பை 2023 தொடரின் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி, மதியம் 12:30 மணியளவில் கொண்டாட்டங்கள் தொடங்கி, 02:00 மணிக்கு டாஸ் போடப்படும். பின் 02:30 மணிக்கு ஆட்டம் நடைபெறும். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை 2023-க்காக பலப்பரீட்சை நடத்துகின்றது. Gurpatwant Singh Pannun Warning to India: உலகக்கோப்பை இறுதிப்போட்டி பயங்கரவாதத்தின் தொடக்கம் - சீக்கிய பிரிவினைவாதி குருபத்வன்ட் பகீர் எச்சரிக்கை.! 

கண்கவர் விமான சாகசங்கள், பாலிவுட் பாடல்களை இசையமைப்பாளர் ப்ரீதம் நேரில் பாட, 500 நடன கலைஞர்கள் ஆட்டத்தை வெளிப்படுத்த என மைதானமே கொண்டாட்டத்தில் திளைக்கவுள்ளது. ஆட்டம் முடிந்ததும் டிரோன் அணிவகுப்பும் இரவில் கண்கவர் ஒளிகளுடன் நடைபெறும்.

நேரடியாக மைதானத்தில் போட்டியை காண ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள் என்பதால், குஜராத் மாநிலம் முழுவதும் இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை வீட்டில் இருந்தபடி நேரடியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, ஹாட்ஸ்டார் செயலி வழியாகவும் காணலாம்.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது டூடுளில், இன்று உலகக்கோப்பை 2023 இறுதி ஆட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக தனது டூடுல் பதிப்பை வெளியிட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 19, 2023 09:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).